பார்வதி மணலால் லிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபாடு செய்தபோது, அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் சூரியனைக் கொண்டு வெப்பத்தை உண்டாக்கினார். அதனால் பார்வதி தனது சகோதரனாகிய திருமாலை வேண்ட, அவர் சந்திரனைக் கொண்டு குளிர்ச்சியை உண்டாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் இந்த ஸ்தலத்து மூலவருக்கு 'நிலாத்திங்கள் துண்டத்தான்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் நிலாத்திங்கள் துண்டத்தான், சந்திர சூடப் பெருமாள் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். ஏகாம்பரநாதர் மூலஸ்தானத்திற்கு வெளியே ஈசான்ய திசையில் சன்னதி உள்ளது. தாயாருக்கு நேர்ஒருவரில்லா வல்லி, நிலாத்திங்கள் துண்ட தாயார் என்று இரண்டு திருநாமங்கள். தாயார் சன்னதி தற்போது இல்லை. சிவபெருமானுக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|